செய்திகள்

சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது

Published On 2017-01-20 05:51 GMT   |   Update On 2017-01-20 05:51 GMT
வர்த்தகத்தை பெருக்க சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரெயில் 34 கண்டெய்னர்களை இணைக்கப்பட்டுள்ளன.

லண்டன்:

சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

வர்த்தகத்தை பெருக்க சீனா- இங்கிலாந்து இடையே சரக்கு ரெயில் போக்கு வரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

இந்த நிலையில், சீனாவின் துறைமுக நகரமான யுவுவில் இருந்து லண்டனுக்கு கடந்த 1-ந் தேதி ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த ரெயில் கஜகஸ்தான். ரஷியா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், மற்றம் பிரான்ஸ் வழியாக 19 நாள் பயணத்துக்கு பிறகு இங்கிலாந்தை சென்றடைந்தது. இன்று அல்லது நாளை லண்டன் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெயில் 34 கண்டெய்னர்களை இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் துணிகள், ஷூக்கள், சூட் கேஸ்கள் மற்றும் சில பொருட்கள் உள்ளன.

சீனா ஏற்கனவே ஜெர்மனி மற்றும் ஸ்பெயினுக்கு இது போன்ற ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

Similar News