செய்திகள்

பாகிஸ்தானில் கள்ளச் சாராயத்துக்கு 30 பேர் பலி

Published On 2016-12-27 09:29 GMT   |   Update On 2016-12-27 09:29 GMT
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கள்ளச் சாராயம் வாங்கி குடித்த 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட டோபா டேக் சிங் பகுதியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை மதுவிருந்துடன் கொண்டாட தீர்மானித்த இவர்களில் சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக தெரிகிறது.

கடந்த 24-ம் தேதி இந்த சாராயத்தை வாங்கி குடித்த சிலர் திடீரென்று மயங்கி விழுந்தனர். வயிற்று வலி மற்றும் கண்பார்வை கோளாறால் பாதிக்கப்பட்ட இவர்களில் பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இன்றைய நிலவரப்படி 30 பேர் பலியானதாகவும், அறுபதுக்கும் அதிகமானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News