செய்திகள்

மெக்சிகோவில் 14 பேர் சுட்டுக்கொலை

Published On 2016-12-07 03:39 GMT   |   Update On 2016-12-07 03:39 GMT
மெக்சிகோ நாட்டில் போலீசாருக்கும் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் ஆயுதம் ஏந்திய நபர்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, உள்ளிட்ட வன்செயல்களால் அதிக பாதிப்புக்குள்ளான வெராகுருஸ் மாகாணத்தில் நேற்று போலீசாருக்கும் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். போலீசாருக்கு ஆதரவாக கடற்படை வீரர்களும் சண்டையிட்டனர். இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஆயுதம் ஏந்திய நபர்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசாரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பலர் அருகில் உள்ள மலைப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

Similar News