செய்திகள்

பி.எம்.டபிள்யூ. காரை ஏற்றிச் சென்ற ரெயில் தடம் புரண்டது: 97 வாகனங்கள் சேதம்

Published On 2016-12-06 14:24 GMT   |   Update On 2016-12-06 14:24 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பி.எம்.டபிள்யூ காரை ஏற்றிச் சென்ற ரெயில் தடம் புரண்டது. இதில் 97 வாகனம் சேதம் அடைந்தது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள க்ரீர் பகுதியில் பி.எம்.டபிள்யூ கார் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் தயாரிக்கப்பட்ட காரை ஏற்றிக் கொண்டு ரெயில் ஒன்று சார்லெஸ்டனுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் திடீரென தடம்புரண்டது.

இதில் 97 வாகனங்கள் சேதம் அடைந்தன. யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் ரெயில் என்ஜின் பலத்த சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் வெகுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News