செய்திகள்

பின்லாந்தில் துப்பாக்கி சூடு: நகரசபை தலைவி, 2 பத்திரிகையாளர் பலி

Published On 2016-12-04 13:43 GMT   |   Update On 2016-12-04 13:43 GMT
பின்லாந்தில் பிரபல ரெஸ்டாரண்ட் முன் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் உள்பட மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்லாந்தில் இமாட்ரா நகரில் உள்ளது. இங்கு பிரபலமான வுவோக்சென்வஹ்தி என்ற ரெஸ்டாரண்ட் ஒன்று உள்ளது. இந்த ரெஸ்டாரண்ட் முன் 23 வயதான உள்ளூர் வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கி மூலம் திடீரென கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான்.

அப்போது ரெஸ்டராண்டில் இருந்து வெளியே வந்த இரண்டு பத்திரிகையாளர்கள் உள்பட மூன்று பெண்கள் மீது துப்பாக்கு குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பதிரிகையாளர்கள் இருவருடன் இறந்த மற்றொரு பெண்மணி இமாட்ரா நகரசபை தலைவி டினா விலென்-ஜேப்பினேன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News