செய்திகள்

வேற்றுகிரக வாசிகளின் வாகனம்போல் தோன்றிய பனிப்படலம்

Published On 2016-12-04 10:26 GMT   |   Update On 2016-12-04 10:26 GMT
பிரிட்டன் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வேற்றுகிரக வாசிகளின் விண்கலம்போல் தோன்றிய பனிப்படலம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லண்டன்:

பிரிட்டன் நாட்டின் வடகிழக்கு வேல்ஸ் பகுதியில் உள்ள டென்பிக்‌ஷைர் அருகே இருக்கும் டிரெமெய்ர்ச்சியான் கிராமத்தில் உள்ள வான்வெளியில் வேற்று கிரகவாசிகள் பயன்படுத்தும் விண்கலத்தைப் போன்ற பனிக்குவியல் கடந்த 2-ம் தேதி அதிகாலை காணப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது கிராமத்து வீட்டில் இருந்து செல்லநாயுடன் நடைபயிற்சிக்கு சென்ற ஹன்னா பிலான்ட்போர்ட் என்ற 33 வயது பெண், இந்தக் காட்சியை புகைப்படமாக எடுத்து பிரபல நாளிதழுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சுமார் பத்து நிமிடங்கள்வரை குடைபோல காட்சியளித்த அந்தப் பனிப்படலம் பின்னர் வெண்மேகத் திட்டாக மாறிவிட்டதாக ஹென்னா குறிப்பிடுகிறார்.

பனிக்காலங்களில் தரையில் இருந்து வெளியாகும் வெப்பமானது இதைப்போன்ற பனிப்படலமாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் ஹன்னா பிலான்ட்போர்ட் நேற்று வெளியிட்ட பின்னர், ஏராளமான ‘லைக்’களும், ‘ஷேர்’களும் விமர்சனங்களும் பதிவாகி வருகின்றன.

Similar News