செய்திகள்

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட்

Published On 2016-12-03 12:47 GMT   |   Update On 2016-12-03 12:47 GMT
கூகுளின் புதிய இயங்குதள பதிப்பான ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் ஏற்கனவே அறிவித்த தேதிக்கு முன்பாகவே வழங்கப்படுகிறது. இதனால் புதிய ஸ்மார்ட்போன்களிலும் நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம்.
கூகுள் இறுதி பதிப்பான ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கூகுள் பிக்ஸல், நெக்சஸ், மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களுக்கு டிசம்பர் 6 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பயனர்கள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதள அப்டேட் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

அதன் படி துருக்கியைச் சேரந்த ஜெனரல் மொபைல் 4ஜி பயனருக்கு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதள அப்டேட் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. புதிய அப்டேட் 240.6 எம்பி அளவு கொண்டிருப்பதாகவும் இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிழைகள் திருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய அப்டேட்டுடன் பாதுகாப்பு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து சாம்சங்கின் கேலக்ஸி A3, A5, A7, A8, A9 மற்றும் A9 ப்ரோ கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் வழங்கப்படுவதை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆண்ட்ராய்டு நொக்கட் அப்டேட் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தாலும் வெளியாகும் தேதி குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A8 (2016) மற்றும் கேலக்ஸி A9 ப்ரோ உள்ளிட்ட கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு வெளியிடப்பட்டது.

இதனால் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் நௌக்கட் அப்டேட் பெறும் முதன்மை ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி A8 (2016) மற்றும் கேலக்ஸி A9 ப்ரோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சோனி நிறுவனமும் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் வழங்குவது குறித்து வீடியோ மூலம் உறுதி செய்திருக்கிறது. எனினும் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல் எதுவும் வழங்கப்படவில்லை.
 
புதிய அப்டேட் குறித்து சாம்சங், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் நௌக்கட் அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News