செய்திகள்

இந்தோனேசியாவில் 16 போலீசாருடன் சென்ற விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்

Published On 2016-12-03 11:33 GMT   |   Update On 2016-12-03 11:33 GMT
இந்தோனேசியாவில் இன்று 16 போலீசாருடன் சென்ற விமானம் தகவல் தொடர்பை இழந்து காணாமல் போனது. கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜகார்த்தா:

இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில் உள்ள பதாம் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 16 போலீஸ்காரர்கள் பயணம் செய்தனர்.

இந்த விமானம் பதாம் தீவு கடற்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்தும், விமானம் எங்கு சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மீட்புக்குழுவினர் பதாம் தீவு கடற்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாயமான விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, மீட்புக்குழுவினர் பதாம் தீவு கடற்பகுதியில் தேடி வருவதாக மீட்புக்குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையே விமானத்தின் பாகம் ஒன்று கடலில் கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

Similar News