செய்திகள்

துணிகளை துவைத்து மடித்து வைக்கும் ரோபோ ஜப்பானில் தயாரிப்பு

Published On 2016-12-03 05:44 GMT   |   Update On 2016-12-03 05:44 GMT
துணிகளை துவைத்து மடித்து வைக்கும் ‘ரோபோ’ ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரோபோ 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ:

‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. வெளிநாடுகளில் ஓட்டல்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் ரோபோக்கள் பணி புரிகின்றன. இந்த நிலையில் துணிகளை துவைத்து அழகாக மடித்து அடுக்கி வைக்கும் ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட உள்ளன.

தி லாண்ட்ராய்ட் எனப்படும் அந்த ரோபோ ரெப்ஜி ரேட்டர் அளவில் இருக்கும். அது துணிகளை துவைத்து, காயவைத்து மடித்து அங்குள்ள டிராயரில் மடித்து வைக்கும் தொழில்நுட்ப திறன் கொண்டது.

தயாரிப்பு பணியில் இருக்கும் இந்த ரோபோ 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எந்திரம் கேட்டு 1 லட்சத்து 60 ஆயிரம் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News