செய்திகள்

காற்று மாசுபாடு: இந்தியா, சீனாவில் 16 லட்சம் பேர் மரணம்

Published On 2016-12-03 00:19 GMT   |   Update On 2016-12-03 00:19 GMT
காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு 16 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
பீஜிங்:

உலக அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மக்கள் தினசரி இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.

காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு 16 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், படிம எரிபொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியதன் காரணமாக இருநாடுகளில் மாசுபாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள 10 நாடுகளில் காற்று மாசுபாடுகளினால் மரணம் அதிகமாக நிகழ்ந்துள்ளது.

2015-ம் ஆண்டில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் இந்தியா மற்றும் சீனாவில் முறையே 138 மற்றும் 115 பேர் இறந்துள்ளனர்.

Similar News