செய்திகள்

அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிப்பேன்: இந்திய-அமெரிக்க கவர்னர் நிக்கி ஹாலே தகவல்

Published On 2016-10-27 11:02 GMT   |   Update On 2016-10-27 11:02 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு வாக்களிக்கப் போவதாக தெற்கு கரோலினாவின் இந்திய-அமெரிக்க கவர்னர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த மாதம் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் பதவியை பிடிப்பதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி உள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாகவே உள்ளன.

குடியரசு கட்சியின் முக்கிய தலைவரான காலின் பாவெல் சொந்த கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளார். இது டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதேபோல் தெற்கு கரோலினா மாகாணத்தின் இந்திய-அமெரிக்க கவர்னரான நிக்கி ஹாலே, டிரம்புக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார்.

“இரண்டு வேட்பாளர்கள் மீதும் திருப்தி இல்லாததால் இந்த ஆண்டின் அதிபர் தேர்தல் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. டிரம்புடன் பல விஷயங்களில் உடன்படாத போதிலும் தற்போதைய சூழ்நிலையில் அவருக்கே வாக்களிக்க முடிவு செய்துள்ளேன்” என்றார் நிக்கி.

Similar News