செய்திகள்

தொழில் தொடங்க சிறந்த நாடுகள் பட்டியல்: சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து முதலிடம்

Published On 2016-10-26 15:33 GMT   |   Update On 2016-10-26 15:33 GMT
உலகளவில் தொழில் தொடங்க சிறந்த நாடு என்ற பெருமையை உலக வங்கி நியூசிலாந்து நாட்டிற்கு வழங்கியுள்ளது.
ஜெனிவா:

உலக வங்கி 2017ம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 10 வருடங்களாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து நாடு முதலிடம் பெற்றுள்ளது.

தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சட்ட சிக்கல்கள் குறைவு. குறுகிய காலத்தில் தொழில் தொடங்கலாம் போன்ற காரணங்களால் நியூசிலாந்து நாட்டிற்கு இந்தப் பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது.

2-வது இடத்தை சிங்கப்பூரும், 3-வது இடத்தை டென்மார்க் நாடும் பிடித்துள்ளன. 4-வது இடத்தில் ஹாங்காங், 5-வது 6-வது இடங்களில் முறையே தென் கொரியா, நார்வே நாடுகள் உள்ளன.

அமெரிக்கா 7-வது இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஜப்பான் 34-வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா 84-வது இடத்திலிருந்து 78-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்தியா இப்பட்டியலில் 130-வது இடத்தில் நீடிக்கிறது.

Similar News