செய்திகள்

ஈராக்கில் 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை கொன்று குவித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்

Published On 2016-10-26 05:36 GMT   |   Update On 2016-10-26 05:36 GMT
ஈராக்கில் 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவித்தனர்.
பாக்தாத்:

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் நகரை மீட்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பின்வாங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து மனிதகேடயமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மொசூல் நகரில் தங்கள் பிடியில் இருந்த 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

ஈராக் ராணுவம் மொசூலை நெருங்கி சுற்றி வளைப்பதால் ஆத்திரம் அடைந்து அங்குள்ள மக்களை கொன்று குவிக்கின்றனர். மேலும் மொசூலில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள சபினா என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு பொதுமக்கள் 15 பேரை சுட்டுக்கொன்று பிணங்களை ஆற்றில் வீசினர்.

அங்கு வாகனத்தில் வந்த 6 பேரின் கைகளை கட்டி கிராமம் முழுவதும் இழுத்து சென்றனர் துலோல் நசெர் என்ற கிராமத்தில் துப்பாக்கி சூடு காயங்களுடன் கூடிய 70 உடல்களை ஈராக் ராணுவம் கண்டுபிடித்தது.

Similar News