செய்திகள்

மியான்மரில் நிலநடுக்கம்

Published On 2016-10-26 03:31 GMT   |   Update On 2016-10-26 03:31 GMT
மியான்மர் நாட்டை இன்று காலை 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் தாக்கியது.
யாங்கூன்:

மியான்மர் நாட்டை இன்று காலை 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் தாக்கியது.

இன்றுகாலை 7.52 மணியளவில் பூமியின் அடியில் சுமார் 90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 அலகுகளாக பதிவானதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Similar News