செய்திகள்

நோபல் பரிசுக்கு தேர்வான பாப் டிலன் எங்கே? - 5 நாட்களாகியும் தொடர்பு கொள்ள முடியவில்லை

Published On 2016-10-18 15:36 GMT   |   Update On 2016-10-18 15:37 GMT
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பாப் டிலனுக்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்களாகிவும் அவரை நோபல் கமிட்டியால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஸ்டாக்ஹோம்:

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலனுக்கு (வயது 75) வழங்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை நோபல் குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

உலகின் பெருமை மிகு விருதான நோபல் பரிசு பெறுதை பாப் டிலன் எப்படி உணர்கிறார்? இதுபற்றி அவர் கூறிய கருத்து என்ன? என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஏன், நோபல் தேர்வுக்குழுவினருக்குக்கூட தெரியவில்லை. விருது அறிவித்து ஐந்து நாட்களாகியும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.

எனவே, அவரை தொடர்பு கொள்ள நோபல் கமிட்டி மேலும் முயற்சி எடுக்காது என்று கமிட்டியின் செயலாளர் சாரா டேனியஸ் தெரிவித்துள்ளார். அதேசமயம், வரும் டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவிற்கான அழைப்பை ஏற்று பாப் டிலன் வந்த பரிசை பெறுவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Similar News