செய்திகள்

அலெப்போ மீதான தாக்குதல் ஒரு போர் குற்றம்: ரஷ்யாவிற்கு ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

Published On 2016-10-17 21:08 GMT   |   Update On 2016-10-17 21:08 GMT
சிரியாவின் அலெப்போ நகர் மீது ரஷ்யா மற்றும் அதிபர் ஆசாத் படைகள் தாக்குதல் நடத்தினால், அது போர் குற்ற நடவடிக்கையாக கருத்தப்படும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டமஸ்கஸ்:

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷ்யாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது  வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருவதற்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் சிரிய அரசின் இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்ற நடவடிக்கையாக கருதப்படும் என்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பியன் நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் கலந்து கொண்ட மாநாடு லக்ஸம்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் 28 நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சிரிய அரசுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இந்த கூட்டத்தின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு தரப்பு படைக்கும் கிளர்ச்சியாளர்கள் படைக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

Similar News