செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இந்து திருமண மசோதா நிறைவேற்றம்

Published On 2016-09-27 18:25 GMT   |   Update On 2016-09-27 18:25 GMT
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இந்து திருமண மசோதா நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கீழ்சபையில், 10 மாத கால விவாதங்களுக்கு பிறகு, இந்து திருமண மசோதா நேற்று  நிறைவேறியது. இதன் மூலம் இந்து சிறுபான்மை தம்பதியர் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள முடியும்.

இதன்மூலம் இந்து பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த மசோதாவை செனட் சபையும் தாமதமின்றி நிறைவேற்றும்.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 1.6 சதவீதம் பேர் இந்துக்கள், சுதந்திரம் அடைந்த நாள் முதல் அவர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கு ஒரு வழியின்றி இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்து திருமண மசோதா நிறைவேற்றம், ஒரு வரலாற்று சிறப்பான சம்பவமாக பார்க்கப்படுகிறது.

Similar News