செய்திகள்
கோப்புப் படம்

இலங்கை சிறையில் தமிழ் கைதிகள் திடீர் உண்ணாவிரதம்

Published On 2016-09-23 10:16 GMT   |   Update On 2016-09-23 10:16 GMT
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு அனுராதாபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 20 தமிழ் கைதிகள் இன்று திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு:

இலங்கையில் முள்ளிவாய்க்கால் உச்சகட்ட போருக்கு பின்னர் விடுதலைப் புலி இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்ட பலர் பல ஆண்டுகளாக இங்குள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர்மீது உரிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு தொடரப்படாமலும், அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தாமலும் சிறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்படுவதை கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் அனுராதாபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 20 கைதிகள் கடந்த புதன்கிழமையில் இருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க வசதியாக யாழ்ப்பாணம் அல்லது வவுனியா சிறைகளுக்கு தங்களை மாற்ற வேண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News