தமிழ்நாடு

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்- பெண்கள் உள்பட 3 பேர் கைது

Update: 2022-10-06 08:55 GMT
  • ஆசாரி பள்ளம் அருகே இந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக ஆசாரிப்பள்ளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
  • ஆண்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு இங்கு வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில், ஆசாரி பள்ளம் அருகே இந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக ஆசாரிப்பள்ளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மரிபா தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டில் வாலிபர் ஒருவரும் 2 பெண்களும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் . பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவருடன் இருந்தது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண் என்பதும், மற்றொருவர் விருதுநகரை சேர்ந்த 43 வயது பெண் என்பதும் அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் அவர்கள் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ஆண்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு இங்கு வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இங்கு சில நாட்களாகவே ஏராளமான ஆண்கள் வந்து சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Similar News