தமிழ்நாடு

சென்னையில் நாளை 3 ஆயிரம் மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்

Published On 2023-11-24 06:34 GMT   |   Update On 2023-11-24 06:34 GMT
  • 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர்.
  • ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்கான படிவங்கள் வழங்கப்படும்.

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும் வழங்க வேண்டும். சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடி பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் வேறு தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் படிவம் 8ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இதற்கான சிறப்பு முகாம் கடந்த 4 நாட்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் உள்ள 3 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட்டது.

முதல் கட்டம் 4 மற்றும் 5-ந்தேதி நடந்தது. 18, 19-ந் தேதி நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தள்ளி வைக்கப்பட்டன.

அந்த முகாம்கள் நாளை (25-ந்தேதி) மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் படிவங்கள் 6, 6ஏ, 7, மற்றும் 8ஐ ஆகியவற்றை பயன்படுத்தி பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்கான படிவங்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News