தமிழ்நாடு

தமிழகத்தில் கடைகளில் குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- விக்கிரமராஜா எச்சரிக்கை

Published On 2022-10-01 06:25 GMT   |   Update On 2022-10-01 06:25 GMT
  • கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பில் உழைப்பாளர்கள் அதிகம் உள்ளனர்.
  • குட்கா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த தச்சூரில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் மாநாடு நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பில் உழைப்பாளர்கள் அதிகம் உள்ளனர். வியாபாரிகளும் உழைப்பாளர்கள் தான் கூட்டமைப்பிற்கு வியாபாரிகள் எப்பொழுதும் துணை நிற்பார்கள். தமிழக அரசு போதை பொருள் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு வியாபாரிகள் பேரமைப்பு துணை நிற்கும்.

குட்கா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக எத்தனை முறை நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் அதே தவறை கடை உரிமையாளர்கள் செய்தால் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News