தமிழ்நாடு

2, 3, 4-ம் ஆண்டு மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்

Update: 2022-08-13 09:47 GMT
  • வேலைவாய்ப்பு மற்றும் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
  • புதிய பாடத்திட்டம் அண்ணா பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.

திருத்தியமைக்கப்பட்டுள்ள புதிய பாடத் திட்டத்தில் வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

2-ம், 3-ம், 4-ம் ஆண்டு பாடத்திட்டங்கள் திருத்தி மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு மேலாக நடந்த தொழில் வல்லுனர்கள், கல்வியாளர்கள் ஆலோசனைக்கு பிறகு பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது.

புதிய பாடத்திட்டம் அண்ணா பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழகம் "வெர்டிகல்ஸ்" என்று அழைக்கப்படும் ஒரு கிளஸ்டரில் படிப்புகளை அடுக்கி வைத்துள்ளது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் சேர்க்கப்படும் திறன் மேம்பாட்டு படிப்புகள் ஒரு நல்ல நகர்வாகும்.

ஏனென்றால் மாணவர்கள் கட்டாயமாக தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகம் ஜெர்மன் மற்றும் ஜப்பானிய வெளிநாட்டு மொழிகளை அறிமுகப்படுத்த முன் மொழிந்துள்ளது. அதனால் மாணவர்கள் கட்டாயம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

Similar News