தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மேலும் ஒருவர் சடலமாக மீட்பு- பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

Published On 2022-10-04 03:25 GMT   |   Update On 2022-10-04 03:26 GMT
  • இறந்தவர்கிளன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6வது நபரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வந்தனர்.

பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்து பின்னர் சிறிது நேரத்தில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர்.

இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய 2 பேர் உடலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் 4 பேரில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 6வது நபரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News