தமிழ்நாடு

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் லிப்ட் வசதிகளை அதிகரிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2022-10-07 09:32 GMT   |   Update On 2022-10-07 09:32 GMT
  • சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் நான்கு பெரிய கட்டிடங்கள் உள்ளது.
  • இரண்டு லிப்ட் நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கும், 2 லிப்ட் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் நான்கு பெரிய கட்டிடங்கள் உள்ளது. ஒவ்வொரு கட்டிடங்களிலும் 6 தளங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் மருத்துவம் பார்க்க வருகை தருகின்றனர். இங்கு அமைந்துள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும் 4 லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு லிப்ட் நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கும், 2 லிப்ட் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தினந்தோறும் அதிகமாக நோயாளிகள் வருவதால் இரண்டு லிப்ட் போது மானதாக இல்லை. ஆகவே மேலும் லிப்ட் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதோடு எஸ்கலேட்டர் வசதிகளை (நகரும் படிகட்டுகள்) ஏற்படுத்தினால் தங்குதடையின்றி மேல் தளங்களுக்கு செல்ல ஏதுவாகவும், வசதியாகவும் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News