தமிழ்நாடு

சென்னையில் தட்டுப்பாடின்றி 3,991 மெகாவாட் மின்சப்ளை- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

Published On 2023-05-16 06:12 GMT   |   Update On 2023-05-16 06:56 GMT
  • சென்னையில் நேற்று அதிகபட்சமாக மின் நுகர்வு 84051 மி.யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 3991 மெகாவாட் ஆகும்.
  • சென்னையில் மின் நுகர்வு 84.51 மி.யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு 24.4.2023 அன்று 84.23 மில்லியன் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை:

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏ.சி., ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

அதன்படி அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக மின் வாரியம் தயார் நிலையில் முன்னேற்பாடுகளை செய்து தட்டுப்பாடின்றி மின் வினியோகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று அதிகபட்சமாக மின் நுகர்வு 84051 மி.யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 3991 மெகாவாட் ஆகும்.

இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சென்னையின் நேற்றைய (15-ந்தேதி) மின் தேவை 3991 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச தேவை 20.4.2023-ல் 3778 மெகாவாட் ஆகும்.

நேற்று சென்னையில் மின் நுகர்வு 84.51 மி.யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு 24.4.2023 அன்று 84.23 மில்லியன் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News