தமிழ்நாடு

குளச்சல் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதை காணலாம்.

குளச்சலில் இன்றும் 3-வது நாளாக கடல் சீற்றம் நீடிப்பு: வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

Published On 2023-05-11 08:08 GMT   |   Update On 2023-05-11 08:08 GMT
  • குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும்.
  • பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது

குளச்சல்:

குளச்சல் சுற்று வட்டார கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படும்.

தற்போது மே மாதமே கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் அலைகளின் உக்கிரமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் இன்றும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கட்டுமரங்களும் குறைந்த அளவே கடலுக்கு சென்றன.

குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும். தற்போது கடல் சீற்றமாக காணப்படுவதால் மேடான பகுதியில் உள்ள மேடுகளை கடல் அலை மணல்களை இழுத்து செல்லப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

குளச்சல் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதை காணலாம்.

Tags:    

Similar News