தமிழ்நாடு

ரெயில்


புரட்டாசி மகாளய அமாவாசை: மதுரை-காசிக்கு ரெயில் சேவை

Published On 2022-08-27 04:31 GMT   |   Update On 2022-08-27 04:31 GMT
  • மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி, கயா விஷ்ணுபாத ஆலயத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம்.
  • மதுரை-காசி ஆன்மீக சுற்றுலா ரெயில் முன்பதிவுக்கு www.ularail.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

மதுரை:

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து செப்டம்பர் 22-ந் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக காசி செல்லும்.

மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி, கயா விஷ்ணுபாத ஆலயத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம். அதன் பிறகு காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயங்களில் தரிசனம், நைமிசாரண்யம் சக்கர தீர்த்தத்தில் நீராடி திவ்யதேச தேவராஜ பெருமாள் தரிசனம், ஹரித்துவார் கங்கையில் நீராடி மானசாதேவி தரிசனம், டெல்லி அக்சர்தாம் சுவாமி நாராயண், மதுரா கிருஷ்ணபூமி கோவர்த்தன தேச பெருமாள் மற்றும் நவமோகன கிருஷ்ண பெருமாள் ஆலய தரிசனத்துடன் சுற்றுலா முடிகிறது.

இது 12 நாள் சுற்றுலா ஆகும். தனி நபராக பயணம் செய்தால் ரூ.38 ஆயிரத்து 600 மற்றும் 46 ஆயிரத்து 200 ஆகிய கட்டணங்களை தேர்வு செய்யலாம். குடும்பமாக 2, 3 பேர் பயணம் செய்தால், 1 நபருக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை கட்டண சலுகை கிடைக்கும். குறைந்த வசதிகளுடன் 3 பேர் பயணம் செய்தால், ஒருவருக்கு ரூ. 24 ஆயிரத்து 900 கட்டணம் வசூலிக்கப்படும்.

மதுரை-காசி ஆன்மீக சுற்றுலா ரெயில் முன்பதிவுக்கு www.ularail.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News