தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்களுக்கு விபத்து ஏற்பட்டால்.... மின்சார வாரியம் அறிவிப்பு

Published On 2023-10-31 06:16 GMT   |   Update On 2023-10-31 06:16 GMT
  • அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  • பணியாளர்கள் பணியின்போது எர்த்ரோட் பயன்படுத்துவதை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சென்னை:

மின்வாரிய முதன்மை என்ஜினீயர் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மின்சார வாரியத்தில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்வது, முறையான கண்காணிப்பு இல்லாமல் வேலை செய்வது, ஏபி சுவிட்சுகளில் திறந்திருக்கும் பிளேடுகளை சரிபார்க்காமல் இருப்பது உள்ளிட்டவற்றால் விபத்துகள் ஏற்படுகிறது.

இதனால் அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களால் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, தளத்தில் உள்ள மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரி பார்த்து, பணியாற்ற வேண்டும்.

பணியாளர்கள் பணியின்போது எர்த்ரோட் பயன்படுத்துவதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியாற்றும்போது விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News