தமிழ்நாடு

கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 44 கிலோ பிரமாண்ட சிறுதானிய இட்லி

செஸ் ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்த 44 கிலோ எடையில் பிரமாண்ட தம்பி இட்லி

Published On 2022-07-30 08:56 GMT   |   Update On 2022-07-30 08:56 GMT
  • சிறுதானிய தம்பி இட்லி சென்னை மெரினாவில் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது.
  • இட்லி மாவுடன் சிறு தானியங்களையும் சேர்த்து செய்யப்பட்ட 44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இட்லி இனியவன் கூறியதாவது:-

சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் மிக பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமாக (குதிரை) தம்பி உருவத்தில் 44 கிலோ எடையுள்ள சிறுதானிய தம்பி இட்லி காசிமேடு கடற்கரை, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மெரினா கடற்கரை நம்ம சென்னை செல்பி ஸ்பாட் 7 மணி முதல் 8.30 மணி வரை கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமான தம்பி குதிரை உருவத்தில் இட்லி மாவுடன் சிறு தானியங்களையும் சேர்த்து செய்யப்பட்ட 44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி உருவாக்கப்பட்டு உள்ளது.

சிறுதானியங்கள் மூலம் செய்து காட்சிப்படுத்துவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவான சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News