தமிழ்நாடு

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி. மல்லையா


பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் மதுரை-காசி இடையே தனியார் ரெயில் இயக்க திட்டம்

Published On 2022-06-15 05:24 GMT   |   Update On 2022-06-15 05:24 GMT
  • தேனி-போடி இடையிலான அகல ரெயில் பாதை திட்டம் .
  • பாம்பன் புதிய மேம்பால பணிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடியும்.

மதுரை:

தேனி-போடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இதனை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவர் மதுரை ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன பயணிகள் காத்திருப்பு அறை, ஒரு நிலையம்-ஒரு பொருள் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சுங்கடி சேலை விற்பனை மையம் மற்றும் ரெயில் நிலைய வெளி வளாக பகுதியில் மழைநீர் சேகரிப்பு வசதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனி-போடி இடையிலான அகல ரெயில் பாதை திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் முடிவடையும். பாம்பன் புதிய மேம்பால பணிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடியும்.

"பாரத் கவுரவ்" திட்டத்தின் கீழ் மதுரை-காசி இடையே தனியார் ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்குவது தொடர்பாக விண்ணப்பம் வந்து உள்ளது. அது இப்போது பரிசீலனையில் உள்ளது.

காரைக்குடி-திருவாரூர் இடையே கேட் கீப்பர் பணிகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் பிறகே இந்த பகுதியில் கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், இணைப் பொது மேலாளர் செந்தமிழ்ச்செல்வன், கோட்ட பொறியாளர் வில்லியம் ஜாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News