தமிழ்நாடு
கைது

மான் கொம்புகள், தோல்கள் பதுக்கிய சித்த வைத்தியர் கைது

Published On 2022-05-17 06:50 GMT   |   Update On 2022-05-17 06:50 GMT
திண்டுக்கல் அருகே மான்கொம்புகள், தோல்கள் பதுக்கிய சித்த வைத்தியரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் கடமான் கொம்புகள், புள்ளிமான் தோல்கள், நரியின் நகங்கள், பல் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(48). ஜோதிடம் மற்றும் சித்தவைத்திய தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் வன உயிரினங்களின் தோல், கொம்பு உள்ளிட்டவை பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் வனபாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து வனச்சரகர்கள் விஜயகுமார், செந்தில்குமார், வனவர்கள் இளங்கோவன், வனக்காப்பாளர்கள் ராம்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரெட்டியபட்டியில் உள்ள சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 3 கடமான் கொம்புகள், 3 புள்ளிமான் தோல்கள், நரியின் நகங்கள், பல், காட்டுப்பன்றியின் மண்டைஓடு, நட்சத்திர ஆமை ஓடுகள், சாதாரண ஆமை ஓடுகள் உள்ளிட்டவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து சுந்தரமூர்த்தியையும் கைது செய்தனர். இந்த பொருட்களை அவர் யாரிடம் இருந்து வாங்கினார், வேறு யாருக்காவது இதனை விற்பனை செய்ய வைத்துள்ளாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News