தமிழ்நாடு
தமிழக அரசு

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அரசு பணி- 10 ஆயிரத்து 402 பணியிடங்களை நிரப்ப அரசாணை

Published On 2022-05-16 21:21 GMT   |   Update On 2022-05-16 21:21 GMT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-2022-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநர் ஆற்றிய உரையில், அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பை செயல்படுத்த , தலைமைச் செயலக துறைகளிடமிருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்களும், பழங்குடியினருக்கு 2,229 இடங்களும் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 402 கண்டறியப்பட்ட குறைவு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற அரசாணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களை முகமைகள் மூலம் நிரப்ப அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News