தமிழ்நாடு
தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பாலகிருஷ்ணன்

தேர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- பாலகிருஷ்ணன்

Published On 2022-04-28 07:05 GMT   |   Update On 2022-04-28 07:05 GMT
களிமேடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது தேவையற்றது. இதில் அரசியலை புகுத்த கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை மக்கள் அதிகமாக கூடுகிற திருவிழாக்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்கான முறைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

களிமேடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது தேவையற்றது. இதில் அரசியலை புகுத்த கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News