தமிழ்நாடு
102 டிகிரி வெயில் கொளுத்தியது

திருத்தணியில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது- நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரி சுட்டெரித்தது

Published On 2022-04-19 06:46 GMT   |   Update On 2022-04-19 06:46 GMT
சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மீனம்பாக்கத்தில் 97.16 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.
திருத்தணி:

திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்தனர்.

சாலையோர கடைகளில் இளநீர், தர்ப்பூசணி, பழச்சாறு ஜூஸ் குடித்து சூட்டை தணித்தனர்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் அனல் காற்றால் கடும் அவதி அடைந்தனர். இரவில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. தூங்க முடியாமல் வியர்வையால் தவித்தனர்.

வரும் நாட்களிலும் வெயிலின் உக்கிரம் இதேபோல் இருக்கும் என்று தெரிகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மீனம்பாக்கத்தில் 97.16 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. நுங்கம்பாக்கத்தில் 95.36 டிகிர வெயில் கொளுத்தி உள்ளது.
Tags:    

Similar News