தமிழ்நாடு
கள்ளழகர்

சித்திரைத் திருவிழா- தங்க பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகரை உற்சாகமாக வரவேற்ற பக்தர்கள்

Update: 2022-04-14 22:46 GMT
மதுரை சித்திரைத் திரு விழாவின் 11-வது நாளான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
மதுரை:

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண மண்டபத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி-அம்மனின் மணக்கோல காட்சியை தரிசித்தனர். 

இந்நிலையில் சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.  நாளை காலை  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காக  தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு நேற்று மாலை புறப்பட்டார். அவரை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர். செல்லும் வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் அவர் எழுந்தருளி தரிசனம் தந்தார். 
தொடர்ந்து இன்று அதிகாலையில் மூன்று மாவடி யில் கள்ளழகரை மதுரை மக்கள் வரவேற்று உபசரிக் கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.  

பின்னர்பல்வேறு மண்டகப்படி மற்றும் மாரியம்மன் கோவில் பகுதிகளுக்குச் செல்லும் கள்ளழகர் மாலையில் தல்லாகுளம் பெருமாள் ஆலயம் வருகிறார். அங்கு இரவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நாளை காலை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை காண்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகின்றனர். இதையொட்டி சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

Tags:    

Similar News