தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் ஒரு அடி குறைந்தது

Published On 2021-12-26 04:39 GMT   |   Update On 2021-12-26 04:39 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 4953 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4,178 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4424 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல்லுக்கும், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஒகேனக்கல் காவிரியில் 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.

அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் நிலையில், பரிசல் சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாபயணிகள், குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஒகேனக்கல் வழியாக வரும் தண்ணீர் மேட்டூர் அணையை அடைகிறது. ஏற்கனவே பெய்த மழையால் கடந்த நவம்பர் 14-ந் தேதி மேட்டூர் அணை முழுகொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் உபரி நீர் தொடர்ந்து ஆற்றில் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 4953 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4,178 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4424 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. டெல்டா பாசனத்திற்கு நீர்தேவை அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடியும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று அணையின் நீர் மட்டம் 119.04 அடியாக சரிந்தது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் 1 அடி குறைந்துள்ளது. தொடர்ந்து 41 நாட்களாக 120 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது வரத்தை விட அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் குறையத் தொடங்கி உள்ளது.
Tags:    

Similar News