தமிழ்நாடு
கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 6-வது அணு உலை கட்டுமான பணிகள் தொடக்கம்

Published On 2021-12-22 08:55 GMT   |   Update On 2021-12-22 08:55 GMT
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலையில் இருந்து வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் அணு உலைகள் அமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

3 மற்றும் 4-வது அணு உலையில் இருந்து வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ரூ.49,625 கோடி மதிப்பில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடக்கமாக கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி பூமி பூஜை நடத்தப்பட்டு 5-ம் அணு உலைக்கான காங்கிரீட் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அருகிலேயே 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான தொடக்க பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அணு உலை வளாக இயக்குனர் மற்றும் விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள்.

இந்த அணு உலைகளின் கட்டுமான பணிகள் 75 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அனைத்து பூர்வாங்க பணிகள் முடிவடைந்ததும் இந்த அணு உலைகளில் இருந்து 2027-ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் செயல்படும்போது அங்கிருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உறுபத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்படும்.

Tags:    

Similar News