செய்திகள்
கைது செய்யப்பட்டபோது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிடும் விஜய் வசந்த்

நாகர்கோவிலில் எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டம்- விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட 400 பேர் கைது

Published On 2021-09-27 06:38 GMT   |   Update On 2021-09-27 06:38 GMT
நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் இணைந்துள்ளன.
நாகர்கோவில்:

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் இணைந்துள்ளன. 

அவ்வகையில்,  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக, காங்கிரஸ், மதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட  கட்சிகள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. 



இந்த போராட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அந்தோணி, மோகன், இளங்கோ உட்பட 400க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags:    

Similar News