செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாக சரிவு

Published On 2021-07-22 04:18 GMT   |   Update On 2021-07-22 04:18 GMT
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை வந்தது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்துள்ளது. நேற்று 16 ஆயிரத்து 301 கனஅடியாக இருந்த தண்ணீர் இன்று 11 ஆயிரத்து 794 அடியாக குறைந்துள்ளது

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று காலை 73.29 அடியாக இருந்தது. இது இன்று 73.47 அடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News