செய்திகள்
தாய் மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண்

கணவர் மீது புகார் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

Published On 2021-04-13 09:04 GMT   |   Update On 2021-04-13 09:04 GMT
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை:

நெல்லை திசையன் விளையைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி. இவர் இன்று தனது 8 வயது மகள் மற்றும் தாயுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.

அலுவலகம் முன்பு திடீரென தான் மறைத்துக்கொண்டு வந்த கேனில் இருந்து மண்எண்ணையை எடுத்து தன் தலையில் ஊற்ற முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதை கவனித்து உடனடியாக அவரிடம் இருந்து கேனை பறித்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரித்த போது அவர் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 11 வருடங்களுக்கு முன்பு திசையன்விளையை சேர்ந்த ஜெரால்டுராஜா என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 135 சவரன் நகை, 66 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எனது குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்தனர்.

எனது கணவர் வரதட்சணையாக கொடுத்த பணம் மற்றும் நகைகளை அடகு வைத்து கார், பங்களா வாங்கி சொகுசாக வாழ்ந்தார். மேலும் என்னை தினமும் துன்புறுத்துவதோடு எனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வருகிறார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News