செய்திகள்
கால்நடைபராமரிப்புதுறை துணை இயக்குனர் திருகுமாரன் தலைமையில் காயம் அடைந்த யானைக்கு சிகிச்சை

மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் காயம் அடைந்த நெல்லை கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை

Published On 2021-02-10 04:51 GMT   |   Update On 2021-02-10 04:51 GMT
மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் காயம் அடைந்த நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:

தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 8-ந்தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது.

முகாமில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கோவில்களை சேர்ந்த 26 யானைகள் பங்கேற்றுள்ளன. யானைகளுக்கு நடைபயிற்சி சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்புதுறை துணை இயக்குனர் திருகுமாரன் தலைமையில் 24 நேரமும் மருத்துவக்குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முகாமில் பங்கேற்ற நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானை குறுங்குடிவள்ளி லாரி மூலம் கடந்த 6-ந்தேதி அழைத்துவரப்பட்டது. நீண்டநேரம் நின்றவாறு பயணம் செய்த யானை லாரியில் அமர முயற்சித்துள்ளது. ஆனால் அங்கு கட்டையில் கயிறு கட்டப்பட்டிருந்தது. இதனால் யானை அந்த கட்டை மீது உரசியவாறு பயணம் செய்தது. இதில் யானையின் 2 பின்னங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் யானையால் நடக்கமுடியவில்லை.

காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் சில நாட்களில் குணமாகிவிடும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். காயம் ஏற்பட்டிருந்தாலும் யானை மற்ற கோவில்யானைகளை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாவே சுற்றித்திரிந்தது.


Tags:    

Similar News