செய்திகள்
கண்களை கட்டிக்கொண்டு 15 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 5 வயது சிறுவன்

கண்களை கட்டிக்கொண்டு 15 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 5 வயது சிறுவன்

Published On 2020-11-13 07:02 GMT   |   Update On 2020-11-13 07:02 GMT
கோவை அருகே கண்களை கட்டிக்கொண்டு 15 நிமிடம் சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
கோவை:

கோவை மணியக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு ஸ்ரீரனீஷ் (வயது 5) என்ற மகன் உள்ளார். இவர் சோமையம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறார். இந்த சிறுவன் உலக சாதனை முயற்சியாக இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு தொடர்ந்து 15 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார். தொடர்ந்து அவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிறுவனின் தாய் நித்யா கூறும்போது, தற்போது உள்ள நவீன காலக்கட்டத்தில் சிலம்பம் உள்ளிட்ட நமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன. அதை மீட்டெடுக்கும் வகையில் எனது மகனுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்க முன்வந்தோம். இதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிலம்பம் பயிற்சி பெற்றான். அதில் நன்கு தேறிய அவன் டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்று ஏராளமான பதக்கங்கள், சான்றிதழ்களை பெற்று உள்ளான். அதன் தொடர்ச்சியாக கண்களை கட்டிக்கொண்டு ஓய்வு இன்றி தொடர்ந்து 15 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்து உள்ளான் என்றார்.

Tags:    

Similar News