செய்திகள்
கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ்

சாத்தான்குளம் வழக்கு: நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்

Published On 2020-07-01 19:42 GMT   |   Update On 2020-07-01 19:49 GMT
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை:

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 

மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.  4  போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட எஸ்.ஐ.ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் முன்னதாக ரகு கணேசுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் கட்டமாக உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவப்பரிசோதனை முடிந்த உடன் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி முன் தற்போது ஆஜர்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகிவருகிறது.


Tags:    

Similar News