செய்திகள்
முத்துப்பேட்டையில் 4-வது நாளாக தர்ணா போராட்ட நடப்பதை காணாம்.

முத்துப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 4-வது நாளாக தர்ணா

Published On 2020-02-18 05:19 GMT   |   Update On 2020-02-18 05:19 GMT
தமிழக சட்டசபையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் 4-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி கடந்த 15ந்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை (தர்ணா போராட்டம்) துவங்கினர்.

இன்று காலை 4-வது நாளாக போராட்டம் துவங்கியது. இதில் எஸ்.டி.பி கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மனிதநேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வக்கீல் தீன் முகமது, த.மு.மு.க ஒன்றிய தலைவர் நெய்னா முகமது உட்பட்ட ஜமாஅத், இஸ்லாமிய நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், பங்கேற்றனர்.
Tags:    

Similar News