செய்திகள்
கைது

குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி- 6 பேர் கும்பல் கைது

Published On 2020-02-04 17:02 GMT   |   Update On 2020-02-04 17:02 GMT
குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி மோசடி செய்த 6 பேர் கும்பலை ஓசூர் போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:

குறைந்த  விலையில் தங்கம் தருவதாக கூறி மோசடி செய்த 6 பேர் கும்பலை ஓசூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1, பாபு (வயது 48), வானா பாடி ரோடு, நவல்பூர், ராணிப் பேட்டை. 
2. சக்திவேல் (46) ராம லட்சுமி நகர், லூர்துநகர் விரிவாக்கம், கோ.புதூர், மதுரை. 
3. மன்சூர் (41), குளத்து மேட்டு தெரு,  கண்ணமங்கலம், திருவண்ணாமலை. 
4. கண்ணன் (30), நடுப்பட்டி கிராமம், லட்சுமணபுரம் அஞ்சல், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.
5. பிரகாஷ் (35), எம்.ஜி. ரோடு, பாரதியார் தெரு, ஆம்பூர்.
6 மதன்செட்டி (32), சரகருசங்கா கிராமம், பல்ல கோடா வட்டம், அனுகுல் மாவட்டம், ஒரிசா மாநிலம்.(தற்போதுஇவர் பெங்களூரு கங்கதாச புராவில் வசித்து வருகிறார். 

இவர்கள் 6 பேரும் போலீஸ்  உடையில் காரில் வந்து புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம், பெரியார் நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (45) என்பவரிடம் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி அவரிடம் இருந்த 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயையும், செல்போனையும் பறித்து சென்றனர். 

அவருடன் வந்த டிரைவரிடம் இருந்து தங்க செயின் மற்றும் செல்போனையும் பறித்துக் கொண்டனர்.

கைதான 6 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதில் டேனியல் கர்நாடகா, ஆந்திரா, மற்றும் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் போலீஸ் உயர் அதிகாரி, வருமான வரி அதிகாரி என்று ஏமாற்றி பணம் பறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News