செய்திகள்
ரேசன் கார்டு

இணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு

Published On 2020-01-23 04:34 GMT   |   Update On 2020-01-24 07:37 GMT
இணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு பெறலாம். தற்போது மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு முழுவதும் ரே‌சன் கடைகளில் பொருட்கள் வாங்க் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரே‌சன் கார்டுகளை தொலைத்தவர்களும், பெயர், முகவரி போன்றவற்றை திருத்தம் செய்ய விரும்புபவர்களும் இணைய தளத்தில்   www.tnpds.gov.in   என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருத்தங்கள் செய்தவர்களுக்கும், தொலைத்தவர்களுக்கும் 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர்-2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதற்காக புதிதாக மெஷின்களும் வாங்கப்பட்டன. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதியை பொது வினியோக திட்ட இணைய தளத்தில் தொடங்கப்படவில்லை.



தற்போது மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய கார்டு தேவைப்படுவோர், பொது வினியோக திட்ட இணைய தளத்தில் நகல் கார்டுக்கு விண்ணப்பிக்க என்ற பகுதிக்கு சென்ற ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் அந்த செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் உள்ளவர்கள் உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்திலும், மற்ற மாவட்டத்தில் வட்ட வழங்கல் அதிகாரிகள் அலுவலகத்திலும் ஒப்புதல் பெற்றதும் கார்டு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

கார்டு தயாரானதும் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
Tags:    

Similar News