செய்திகள்
மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)

கோடம்பாக்கம்-பூந்தமல்லிக்கு மெட்ரோ ரெயில்- வெளிநாட்டு வங்கி நிதி உதவி

Published On 2020-01-10 09:14 GMT   |   Update On 2020-01-10 09:14 GMT
கோடம்பாக்கம்- பூந்தமல்லிக்கு ரூ.2,306 கோடி செலவில் மெட்ரோ ரெயில் உயர்மட்ட வழித்தட பாதை வெளிநாட்டு வங்கி நிதி உதவியுடன் கட்டப்பட உள்ளது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை- விமான நிலையம், சென்ட்ரல்- பரங்கிமலை வரை மெட்ரோ ரெயில் வழித்தடப் பாதையில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க மண் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது. 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி முதல்- பூந்தமல்லி வரை ரூ. 2,306 கோடி செலவில் உயர்மட்ட பாதையில் 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் இந்த வழித்தட பாதை உருவாக்கப்படுகிறது.

இந்த வழித்தட பாதை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இருந்து பூந்தமல்லி ‘பைபாஸ்’ ரோடு வரை 26 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதில் போரூர், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான் சாவடி, பூந்தமல்லி உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் பொதுமக்கள் போக்குவரத்துக்கு சிறப்பானதாக அமையும்.

52 கி.மீட்டர் தூரத்துக்கு மாதவரம்- தரமணி வழித்தட சுரங்க பாதை பணிகள் வருகிற ஜுன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் இண்டர்நே‌ஷனல் கார்ப்பரேசன் ஏஜென்சி நிதி உதவியுடன் பணிகள் தொடங்குகிறது.

மெட்ரோ பயணிகள் எளிதில் வந்து செல்ல வசதியாக ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ நிலைய நுழைவு பாதை அருகே மாநகர பஸ் நிறுத்தம் விரைவில் அமைக்க மாநகராட்சியை மெட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே போல 8 மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு பாதை அருகில் மாநகர பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News