செய்திகள்
கோப்பு படம்

மதுரையில் திருட்டு வழக்கில் கைதான சிறுவனை தாக்கிய எஸ்.ஐ., போலீஸ் மீது வழக்கு

Published On 2020-01-06 09:47 GMT   |   Update On 2020-01-06 09:47 GMT
மதுரை போலீஸ் நிலையத்தில் மைனர் கைதியை தாக்கியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி சரகத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் சிறுவன் ஒருவன் கடந்த மாதம் திருட்டு வழக்கின் பேரில் பிடிபட்டான். இதையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அவனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக திருட்டு வழக்கின் பேரில் பிடிபட்ட அந்த சிறுவனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் அவனை படுகாயங்களுடன் மதுரை சிறுவர் சீர்திருத்த கூர் நோக்கு இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு ஆஸ் பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் சிறுவனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லம் சார்பில் திலகர் திடல் போலீஸ் உதவி கமி‌ஷனர் வேணுகோபாலிடம் புகார் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உதவி கமி‌ஷனர் பரிந்துரையின் பேரில் சிறுவனை தாக்கியதாக எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News