செய்திகள்
விபத்துக்குள்ளான லாரி

திருவள்ளூர் அருகே 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

Published On 2019-12-10 06:36 GMT   |   Update On 2019-12-10 06:36 GMT
திருவள்ளூர் அருகே 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிதறிய வெங்காயத்தை பொது மக்கள் எடுக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், டிச., 10-

வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ள நிலையில், வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் தடா பத்ரி பகுதியில் இருந்து நேற்று இரவு லாரியில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 10 டன் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்னை கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் டோல்கேட் அருகே அதிகாலை 3 மணி அளவில் வந்து கொண் டிருந்தது. அப்போது டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறியது. மேலும் அந்த சரக்கு லாரியில் முன்பகுதி நொறுங்கி 2 டயர்கள் தனியாக சென்று விட்டது.

இந்த விபத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவரான ஜில் லான் மற்றும் உரிமையாளர் மாபாஷா ஆகியோர் காய மின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் சிதறிய வெங்காயத்தை பொது மக்கள் எடுக்காமல் இருக்க பாதுகாப்பில் ஈடுபட்டனர். வெங்காயம் முழுவதையும் எடுத்த பின்னரே போலீசார் அங்கிருந்து சென்றனர்.

இந்த விபத்தால் அப்பதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News