செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் 2 அடி உயர்வு

Published On 2019-12-04 07:33 GMT   |   Update On 2019-12-04 07:33 GMT
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை:

சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்தது. குடிநீருக்கே பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். வீட்டு தேவைகளுக்காக தண்ணீருக்கு அலைந்தனர். ஒரு லாரி தண்ணீர் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து தண்ணீர் தட்டுப்பாடும் தீர்ந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 2 அடி வரை உயர்ந்துள்ளது.

(மேல்மட்டத்தில் இருந்து கீழ் நோக்கி தண்ணீர் கிடைத்த அளவீடு)



Tags:    

Similar News